Monday, September 23, 2013

50 upgraded school

50 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியல்
1)தூத்துக்குடி மாவட்டம் -2 SCHOOLS 
PUMS -பொட்டல் காடு 
PUMS -பன்னம் பாறை 

2)நெல்லை  மாவட்டம்-2-SCHOOLS  

PUMS பலபுதிர ராமபுரம் 
PUMS-வென்றிலிங்கபுரம்  

3)கோவை மாவட்டம் -2 SCHOOLS 

PUMS-மயிலேறி பாளையம்
PUMS-சுகுனாபுரம் -பேரூர்  ஒன்றியம்

4)திருச்சி -மாவட்டம் -3 SCHOOLS 
PUMS -போசம் பட்டி -அந்தநல்லூர் ஒன்றியம்
PUMS -கரும்புளிபட்டி -மணப்பாறை ஒன்றியம்
PUMS -கரிகாலி -முசிறி  ஒன்றியம்

5)தேனி மாவட்டம்-3 SCHOOLS

PUMS-லக்ஷ்மிபுரம் -போடி 
PUMS-மஞ்சலாறு அணை -பெரியகுளம் 
PUMS-சருமத்துப்பட்டி -பெரியகுளம்

6)திண்டுக்கல்-மாவட்டம்- 2 SCHOOLS 
நத்தம் -PUMS கோட்டைப்பட்டி 
நத்தம் -PUMS உலுப்பகுடி 

7)மதுரை-மாவட்டம்- 2 SCHOOLS

PUMS -ராஜகூர்- மதுரை -EAST 
PUMS -தோப்பூர் 

8)விருது நகர்-மாவட்டம்- 2 SCHOOLS
PUMS -M.புதுப்பட்டி சிவகாசி ஒன்றியம்

PUMS -O.மேட்டுப்பட்டி -சாத்தூர் ஒன்றியம்

9)புதுக்கோட்டை-மாவட்டம்-2 SCHOOLS

 PUMS-புல்வயல் 
PUMS-தூவார் 

10)தஞ்சை மாவட்டம் -2 SCHOOLS

PUMS -சொர்ணாக்காடு -பேராவூரணி ஒன்றியம்
PUMS -காரியவிடுதி -திருவோனம் ஒன்றியம்

11)திருவாரூர் மாவட்டம்-1 SCHOOL

PUMS -சித்தனவாழூர் -நன்னிலம் ஒன்றியம்

12)நாகப்பட்டினம் மாவட்டம்-1 

SCHOOLS PUMS -பெருமாள் பேட்டை -செம்மனார் கோவில் ஒன்றியம்

13)காஞ்சிபுரம் மாவட்டம் -2 SCHOOLS
PUMS -கொளப்பாக்கம் -குன்றத்தூர் ஒன்றியம்
PUMS - நீலமங்கம் -இளந்தூர் ஒன்றியம்

14)திருவள்ளுர் மாவட்டம்- 2 SCHOOLS

PUMS-கரலப்பாக்கம் -வில்லிவாக்கம் ஒன்றியம்
PUMS -பாரன்பாக்கம் -கடம்பத்தூர் ஒன்றியம் 

15)இராமநாதபுரம்-மாவட்டம் -1 SCHOOL

PUMS -கமுதக்குடி -பரமக்குடி ஒன்றியம் 

16)கரூர் -மாவட்டம் -1 SCHOOL

நகரமன்ற நடுநிலைப்பள்ளி -கோட்டைமேடு 

17)வேலூர் மாவட்டம் -1 SCHOOL

PUMS -நெற்குத்தி ஜோலார் பேட்டை

18) விழுப்புரம் மாவட்டம்: 2 SCHOOLS
PUMS- அணைகரைகோட்டாலம், கள்ளக்குறிச்சி ஒன்றியம்.
PUMS- ஊராங்கனி, சங்கராபுரம் ஒன்றியம்


19)சிவகங்கை-மாவட்டம்-2 SCHOOLS
PUMS -பொய்யாவயல் -சாக்கோட்டை ஒன்றியம் 
ராமநாதன் செட்டியார் பள்ளி -சாக்கோட்டை ஒன்றியம் -காரைக்குடி 

டி டி எடுக்கவேண்டியது அவசியமா?

                                    பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் பஞ்., யூனியன் துவக்கப் பள்ளிகளுக்கு 8 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய், தனியார் துவக்கப் பள்ளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த நிதியின் மூலம் பள்ளிகளுக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து துவக்கப் பள்ளிகளும் தலா 3 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகள் 5 ஆயிரம் ரூபாய் டி.டியாக எடுத்து சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் தலைமை ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட வாரியாக போராட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டது.இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென இந்த டி.டிக்களை அனுப்ப வேண்டாம் என்றும், இக்கட்டணத்தை பள்ளி மானிய தொகையில் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கமிஷன் தொகையுடன் டி.டி எடுத்தவர்கள் மீண்டும் மானிய தொகையில் செலுத்துவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.எனவே, வருங்காலங்களில்இதுபோன்ற குளறுபடிகளை நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tuesday, September 10, 2013

TET RESULT 2013


ஆசிரியர் தகுதி தேர்வு 2013-ம் ஆண்டு தாள் - 2 எழுதிய (4௦௦௦௦௦) பேரில் 7 சதவிகிதம் பேர் அதாவது மொத்தம் 28000 பேர்  வெற்றியடைய வாய்ப்புள்ளது. அவர்களில் இவர்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றும் போது  st , sc பிரிவினர் அனைவரும் 90மதிப்பெண் எடுத்து தகுதி பெற்றாலே போதுமானதாக இருக்கும் ஆனால் மற்ற பிரிவினர்களில் 105 மற்றும் 120 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தெரிவு பெற்று விடஅதிக வாய்ப்புள்ளது .மீதமுள்ள பணி இடங்களுக்கு வெய்ட்டேஜ் மிகவும் முக்கியமானதாக அமையும் என்பதில் தேர்வு எழுதியவர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
7 சதவிகிதம் பேர் வெற்றிபெற்றால்  எந்தெந்த பிரிவினர் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால் ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்யப்பட வாய்ப்பு இருக்கலாம் என்ற கணக்கீடும், வெய்ட்டேஜ் அடிப்படையில் எவ்வளவு பேர் தெரிவு செய்ய வாய்ப்புள்ளது என்பதையும்  உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு படி மட்டுமே கணக்கீடு  கொடுக்கப்பட்டுள்ளது இதில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கைமுக்கியமாக பணி இடங்களின் எண்ணிக்கையை பொருத்து இது மாறுபடும்.
கீழுள்ளவாறு ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் பெறுபவர்களுக்கு பணி நியமனம் கிடைக்க அதிகபடியாக வாய்ப்புள்ளது.

Tamil
English
Maths
Science
Social Science
OC
105
105
105
105
120
BC
105
105
105
105
105
MBC
105
105
105
90
105
SC
105
90
90
90
105
ST
90
90
90
90
105




ஒவ்வொரு பாடபிரிவிலும் 105 - 120  க்கு மேல் மதிப்பெண் பெறுபவர்கள் மற்றும் இட ஒதுக்கீடு முறையில் தெரிவு செய்யப்படுபவர்களின் உத்தேச கணக்கீடு
Subject
(OC+BC+MBC)
(120 க்கு மேல் பெறுபவர்கள்
+
105 க்கு மேல் பெற்று 12ஆம் வகுப்பு,கல்லூரி கல்வியில் அதிக வெய்ட்டேஜ் பெறுபவர்கள் மட்டும்)
(SC+ST)
...

Friday, September 6, 2013

தேசிய நல்லாசிரியர் எங்களது நண்பர் திலிப்

                    தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற எங்களது நண்பர் திலிப்


Wednesday, September 4, 2013

IGNOU - MEd & BEd - Entrance Test

IGNOU - MEd & BEd - Entrance Test Previous Year Questions


Here we collect IGNOU - MEd & BEd Entrance Test Previous Year Questions for your reference.

MEd 

IGNOU MEd - 2012  - Entrance Test Question - Click Here

IGNOU MEd - 2011 (Special Education) - Entrance Test Question - Click Here

BEd

IGNOU BEd - 2012 - Entrance Test Question - Click Here

IGNOU BEd - 2011 - Entrance Test Question - Click Here

IGNOU BEd - 2010 - (Special Education) -  Entrance Test Question - Click Here 

IGNOU BEd - 2007 - Entrance Test Question - Click Here

IGNOU BEd - 2006 - Entrance Test Question - Click Here

பாடப்புத்தகம்

2.6 கோடி இரண்டாம் பருவ புத்தகங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம்


            ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, அடுத்த வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. 
 
           ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம், அமலில் உள்ளது. பள்ளி திறந்ததும், ஜூன் முதல், செப்., வரையிலான முதல் பருவத்திற்கு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
 
               அக்டோபர் முதல், இரண்டாம் பருவ பாடத்திட்டங்கள், நடத்தப்படும். இதற்கு, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி, 150 அச்சகங்களில் நடந்து வருகின்றன.

               90 சதவீதம் அளவிற்கு, பாடப்புத்தகங்கள் தயாராகிவிட்டன. இதையடுத்து, அச்சகங்களில் இருந்து, நேரடியாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு, புத்தகங்கள், அனுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, பாடநூல்கழக வட்டாரங்கள் கூறியதாவது: பெரும் அளவிற்கு, புத்தகங்கள், அச்சிடப்பட்டு விட்டன. எனவே, பெரும்பாலான மாவட்டங்களுக்கு, புத்தகங்கள் சென்று விட்டன. எனவே, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள் வழங்குவதில், எவ்வித பிரச்னையும் ஏற்படாது. மாணவர்களுக்கு, முன்கூட்டியே, பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். காலாண்டு தேர்வு விடுமுறைக்குப்பின், அக்., 3ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இருந்தாலும், இந்த மாதத்திற்குள்ளாகவே, முழுமையான அளவில், மாணவர்களுக்கு, புத்தகங்கள் வழங்கப்படும

                சி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்து, அனைத்துப் பள்ளிகளுக்கும், புத்தகங்களை கொண்டு சென்று, வினியோகம் செய்வதற்கான பணிகளை, பள்ளி கல்வித்துறை, முழுவீச்சில் செய்து வருகிறது. இவ்வாறு, பாடநூல்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மாத இறுதியில் இருந்து, பாடநூல்கழக அலுவலகத்தில், இரண்டாம் பருவ புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.

Teacher`s

பள்ளிகல்வி மற்றும் தொடக்கக்கல்வி  நடப்பு செய்தி

           

Posted: 05 Sep 2013 07:14 PM PDT
தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

அதை தொடர்ந்து தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

இதுகுறித்து SSTAன் பொதுச்செயலாளர் திரு.இராபர்ட் கூறுகையில்,  மாவட்ட மாறுதலில் இனி வரும் காலங்களில் எல்லா இடைநிலை ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம்.நான்கு ஆண்டுகளாக கண்ட கனவு பலித்தது.உச்சநீதிமன்றத்தில் இன்று  நடைபெற்ற விசாரணையில் இடைக்கால உத்தரவில் உள்ள 2009க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற சுமார் 17000 இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதலில்  செல்லக்கூடாதென இருந்த  தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது நம்முடைய தீரா தாகத்தை தீர்த்தது என்றும், மேலும் இந்த வழக்கு வெற்றிபெற உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். குறிப்பாக இந்த வழக்கு சார்பாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொண்ட சேர்த்த TNKALVIக்கும் நன்றி தெரிவித்தார். 

ஆசிரியர் பணியிடை மாறுதல் தொடர்பாக இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. இதில் 2008-ம் ஆண்டு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் குறிப்பிட்ட மாவட்டங்களில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது, இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், 2009-ம் ஆண்டிற்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாறுதல் தரலாம் என தீர்ப்பளித்தது.

தமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச் செல்வன் திடீரென இன்று நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில் பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலம், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ் கலாச்சாரத் துறை அமைச்சர் வைகைச் செல்வன், அப்பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கவனித்து வந்த இலாகாவை அமைச்சர் பழனியப்பன் கூடுதலாக கவனிப்பார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி பொறுப்பிலிருந்தும் நீக்கம்
இதனிடையே அ.தி.மு.க. இளைஞர் பாசறைச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் வைகைச்செல்வன் நீக்கப்பட்டுள்ளார்.
பதவி பறிப்புக்கு காரணம் என்ன?
முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு சென்று திரும்பியதிலிருந்தே, தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும், சில அமைச்சர்களின் தலை உருட்டப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.
இதனால் ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட்டில் நாமும் இடம்பெற்றிருக்கிறோமோ என்ற அச்சத்திலேயே பெரும்பாலான அமைச்சர்கள் 'திக்... திக்' என நாட்களை கடத்திவந்தனர். அதிலும் மூத்த பணிவு அமைச்சர் உள்பட குறிப்பிட்ட 4 அமைச்சர்கள் மீது ஜெயலலிதா கடும் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானதால், எந்த நேரத்திலும் அவர்களது பதவி நாற்காலிக்கு கத்தி வீசப்படலாம் என்று அ.தி.மு.க. வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியர் தினமான இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான வைகைச் செல்வன் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரது நீக்கத்திற்கு பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் சபீதாவுடன் ஏற்பட்ட மோதலே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில் பள்ளிக்கல்வித் துறையின் 7 இயக்குனர்கள் மாற்றப்பட்டனர். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதாகவும், இதனையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தனக்குள்ள நெருக்கமான செல்வாக்கை பயன்படுத்தி வைகைச் செல்வனுக்கு எதிராக சபீதா புகார் கூறியதாகவும், இதனைத் தொடர்ந்தே இந்த பதவி பறிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் வைகைச் செல்வனின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்தும் ஆட்சி மேலிடத்திற்கு பல்வேறு புகார்கள் பறந்ததாகவும், பதவி பறிப்புக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கட்சி பொறுப்பும் பறிக்கப்பட்டதற்கு, அ.தி.மு.க.வின் மூத்த புள்ளிகளை அவர் மதிப்பதில்லை என்று கூறப்பட்ட புகார் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
10 ஆவது அமைச்சரவை மாற்றம்
வைகைச் செல்வன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதன் மூலம் தமிழக அமைச்சரவை இத்துடன் சேர்த்து 10 ஆவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் கலக்கம்
வைகைச் செல்வனுக்கு கொடுக்கப்பட்டுள்ள கல்தாவை தொடர்ந்து, மேலும் சிலரும் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளதால் அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. வைகைசெல்வன் அத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக மாண்புமிகு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அவர்களிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் பரிந்துரையின்படி வைகைச்செல்வன் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார். 
இதேப்போல், அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கின்ற சுமார் 1.33 கோடி மாணவ, மாணவியரின் விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் ஒரே நேரத்தில் தங்களது மாணவர்கள் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். 

ஒரே நேரத்தில் அதிக அளவில் பதிவேற்றம் செய்ய முயன்றதால் கம்ப்யூட்டர் சர்வர் முடங்கியது.இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் 4 மண்டலமாக பிரித்து இப்பணிகளை மேற்கொள்ள கால அட்டவணை வகுத்து தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காலக்கெடுவும் அக்டோபர் 1ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான 
உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒரே நேரத்தில் அதிக அளவிலான பள்ளிகள் இந்த இணையதளத்தில் உள்ளீடுகள் செய்ய முயல்வதை கட்டுப்படுத்தும் வகையில் மாணவர்கள் விபரங்களை உள் ளீடு செய்ய வேண்டியவர்களின் பணிகள் பாதிக்காத வகையிலும், கணினி முறையாக அனைவருக்கும் பயன்படும் விதத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களுக்கும் கால அட்டவணை வகுக்கப்பட்டு மாணவர் விபரங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் 8 மாவட்டங்களின் விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பிற மாவட்டங்களின் விபரங்களை பதிவு செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவுகளை முழுமையாக முடிக்க வேண்டும்.

மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு EMIS பதிவு எந்த மாவட்டத்திற்குஎப்போது?

அரியலூர், சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் செப்டம்பர் 4 முதல் 10ம் தேதி.

கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்கள் செப். 11 முதல் 17.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருவாரூர் மாவட்டங்கள் செப்.18 முதல் 24.

தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள்செப்.25 முதல் அக்.1 வரைஒதுக்கீடு செய்து உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.