Thursday, September 25, 2014

order

TET: இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நியமன ஆணை பெற்றுக்கொள்ளலாம்

         ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்   மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நியமன ஆணை பெற்றுக்கொள்ளலாம்.

Tuesday, September 23, 2014

ICT NEWS

கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல் 
பயிற்சிப் பணிமனையில் கல்வித்துறை முதன்மை செயலர் அவர்கள் பேசியது என்ன? 
கல்விசெயலர் திருமதி சபிதா அவர்களை SCERT இயக்குனர் வரவேற்று ,ECS ,Digital lessons பற்றிய சில நடைமுறைகளை சுருங்கக் கூறி அமர, செயலர் அவர்கள் ஆசிரியர்களிடையே ஆசிரி

யர்களுக்காக உரையாற்றினார்….
“ பள்ளிக்கல்வி முதன்மைச் செயலரின் உரை மிக நேர்த்தியாக இருந்தது. ஆசிரியர்களை உற்சாகப்படுத்துவதாகவும், செயலில் இறங்கும் ஆற்றலைத் தருவதாகவும் இருந்தது. 
பள்ளிக் கல்வித் துறைக்கென ஒரு தனி server இல்லாதது கண்டு எனக்கு வருத்தமாக இருந்தது. ஆகவே மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் இந்த செய்தியைக் கொண்டு சேர்த்து,அனுமதி பெற்றேன்.DATA BASE தகவல் முறைமைத் திட்டம் (EMIS) ,வழியாக அனைத்துப் பள்ளிக் கல்வித் துறைகளையும் இணைப்பதற்கான (Integration of School Educational Departments) முயற்சி இது. முதல் முயற்சியாக நம் தமிழகத்தின் அனைத்து ஆசிரியர்கள், குழந்தைகள்,பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே நம் (ICT Award) விருது பெற்ற ஆசிரியர்களின் துணையும் கொண்டு அடுத்த ECS ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
ECS-இன் தேவைஒரு சிலருக்குப் பேசினால் புரியும்,சிலருக்கு வரைந்தால் புரியும்..எல்லோருடைய புரிந்துகொள்ளலும் ஒரே மாதிரியாக இல்லை.சில விஷயங்களை ஒலி-ஒளி மூலம் காட்டினால் உடனே கிரகித்துக்கொள்வார்கள். அதை அவர்கள் வாழ்வில் மறக்கவே மாட்டார்கள்.பாடப் புத்தகங்களைத் தாண்டி, நம்மிடம் கல்வித்தொலைக்காட்சிப் படப்பதிவு நிலையம்(EDU TV STUDIO),பல்வேறு கல்வி செயற்கைக்கோள் இணைப்புகள்(EDU-SAT) செலவின்றி கிடைக்கின்றன.ஆனால் நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை.இது தவிர அண்ணா பல்கலைக்கழகத்திலும் நமக்கு ஒரு நிலையம் உள்ளது.அதைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.PART –II Scheme இல் இதற்கான நிதியுதவி ஒதுக்கி, முதலில் SCERT கடிதம் அனுப்பியது.
பல தனியார் நிறுவனங்கள் என்னை அணுகின. ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.ஏனெனில் ,நமது அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தவிர்த்து யாராலும் இதை சரியாகச் செய்யமுடியாது. உங்களைவிடக் குழந்தைகளை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. பாடநூல்களை மிகச் சரியாக குழந்தைகளிடம் சேர்க்க அவர்களால் மட்டும்தான் முடியும்.
நீங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு காணொலித் தகடும்(CD) மதிப்பீடு செய்யப்படும்.பாடப்பொருள் (CONTENT), பாடத்திட்ட வரைவு (Syllabus) சார்ந்தும்,எளிதில் மாணவர் புரிந்து கொள்ளும் விதத்திலும் மதிப்பீடு செய்யப்படும்.
இவற்றைத் தயார் செய்யும்போது வகுப்பு,பாடம், பாடப்பொருள் ஆகியவை தெளிவாக இருக்கவேண்டும். தர்க்கரீதியாக சரியாக(Logic) இருக்க வேண்டும்.அது மிக முக்கியம்.இவற்றையெல்லாம் உங்கள் மனதில் கொண்டு உருவாக்கினால் அதுவே மிகநல்ல வளமாக இருக்கும்.
கற்பனை செய்து பாருங்கள்,எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு ஆசிரியராக நீங்கள் தயாரிக்கும் DIGITAL RESOURCE உலகம் முழுமைக்கும் உங்களை அடையாளப்படுத்தும்,அந்த வாய்ப்பை இந்தப் பயிற்சி தரும், பயிற்சி என்றுகூட சொல்லக்கூடாது, ORIENTATION எனலாம்.நான் ICT –AWARD க்காக என்னிடம் ஆசிரியர்கள் வருவார்கள்.அவர்கள் செய்துள்ளவற்றைப் பார்க்கும்போதெல்லாம் அதிசயமாக இருக்கும்,அவ்வளவு நல்லாப் பண்ணுவாங்க நம்ம டீச்சர்ஸ்.
எங்களுக்குத் தேவை …Simplicity, Sincerity, Dedicative that’s all. அதிகமாக உயர் வகுப்புகளுக்கான E-Content தயார் செய்ய வேண்டும் . நிறைய DIETs இருக்கு.அவர்களோடு நீங்கள் இணைந்து பணியாற்றி 3 மாதங்களுக்குள், இப்போதைய பணியின் முதல் தொகுப்பாக உங்கள் வளங்களைத் தர வேண்டும்.WISH YOU ALL THE BEST”…. 
இவை நமது கல்விச் செயலர் நமக்காகப் பேசியவை,எவ்வளவு நம்பிக்கையோடு வெளிப்படையாகப் பாராட்டினார். அவ்வளவு சந்தோஷம் நம் ஆசிரியர்களுக்கும்… நம்மை வாழ்த்திவிட்டு விடைபெற்றுவிட்டார் கல்விச் செயலர்.

Tuesday, September 16, 2014

news

நீங்கள் பொறுப்பான பெற்றோரா?

               குழந்தை வளர்ப்பு என்பது கடமை அல்ல, அது ஒரு கலை. '’உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்' என்றார் கலீல் ஜிப்ரான். ஒருபுறம் தங்கள் நிறைவேறாத கனவுகளைக் குழந்தைகள் மூலம் திணிக்கும் 'ரிங் மாஸ்டர்’ பெற்றோர்கள், இன்னொருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியுடனே சேர்ந்து வளரும் குழந்தைகள் இவற்றுக்கு இடையில்தான் இருக்கிறது குழந்தை வளர்ப்பு என்னும் கலை.
இதனைக் கருத்தில்கொண்டே, அன்மையில் சென்னை சர்ச் பார்க் பள்ளிக் குழுமத்தைச் சேர்ந்த சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரையும் அழைத்து, குழந்தை வளர்ப்புக்கான பயிற்சிப் பட்டறையை நடத்தியது. இதில், கலந்துகொண்ட நிபுணர்களின் கருத்துக்கள், பெற்றோர்களுக்குப் பல வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.
குழந்தை ரோபோ அல்ல!
சகோதரி லிஸிட்டா, முதல்வர், சேக்ரட் ஹார்ட் பள்ளி.
'குழந்தை வளர்ப்பு ஒரு சவால். அந்தச் சவாலை வெற்றிகரமாகச் சமாளிக்க, ஒவ்வொரு பெற்றோரும் சில விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; சில தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
 ஒரு குழந்தைக்கு பெற்றோர்  கொடுக்கக்கூடிய பெரிய சொத்தே, தினமும் அவர்களுக்காக ஒதுக்கும் நேரம்தான்். மொபைல்போன், டி.வி, லேப்டாப், வீடியோகேம்ஸ் போன்ற மின்னணுச் சாதனங்கள், குழந்தைகளைச் சமூகத்திடமிருந்து பிரிக்கிறது. மற்றவர்களை, அவர்கள் கோணத்தில் இருந்து புரிந்துகொள்ளும் தன்மை (empathy) குறைகிறது. இணையத்தில் கிடைக்கும் அளவுக்கு அதிகமான தகவல்களும் எதற்கும் கிடைக்கும் உடனடித் தீர்வு’ம் ஆபத்தானவைதான்.  

அதிக மார்க் எடுக்கணும்’, அதிகமா சம்பாதிக்கணும்’ என்று சொல்லிச் சொல்லி, குழந்தைகளிடமிருந்து ரோபோ’க்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் எதிர்காலச் சமூகத்துக்கு ஆற்றல்மிக்க குழந்தைகளை உருவாக்கித்தர வேண்டுமே தவிர, எந்திரத்தனமான ரோபோக்களை அல்ல!'
தோழமை மிக்க தொடர்பு தேவை!
டாக்டர் ஜான்சி சார்லஸ், பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்.
'' பெற்றோர்களாக இருப்பது’ என்பது வேறு, பயனுள்ள பெற்றோர்களாக இருப்பது’ (effective parenting) என்பது வேறு. ஒரு குழந்தையின் உடல், மனநிலைகளில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துபவர்கள்தான் பெற்றோர்.குழந்தையின் முதல் கற்றல், பெற்றோர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. பெற்றோர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் குழந்தைகள் கூர்ந்து கவனிக்கின்றனர். பெற்றோரின் உடை, உணவு, பேச்சு, நடத்தை என எல்லாவற்றையுமே குழந்தைகள் இமிடேட்’ செய்கின்றனர். அதனால் நம் பேச்சில், செயலில் மிகுந்த கவனம் தேவை. குழந்தை எப்படி வர வேண்டும் என்று விரும்புகிறோமோ பெற்றோரும் அப்படியே முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைக்கு, பெற்றோரிடம் பகிர்ந்துகொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கும். குழந்தை சொல்லுவதைப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டு, அதற்கு 80 சதவிகிதம் பதில் அளிக்க முயற்சிக்க வேண்டும். அது பேச ஆரம்பிப்பதற்கு முன்பே நடுவில் குறுக்கிட்டு உரையாடலைத் தடுக்கக் கூடாது. அப்படி குறுக்கிட்டால், குழந்தை நம்மிடம் எதையுமே சொல்லாது.
குழந்தைகளை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தால், மனதளவில் அவர்கள் முடங்கிவிடுவார்கள். எப்போதும் உற்சாக வார்த்தைகளைச் சொல்லி, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில், ஒரு குழந்தையை மட்டும் எப்போதும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசிக்கொண்டிருப்பது மிகமிகத் தவறு. புகழ்ச்சியும், இகழ்ச்சியும் அந்தக் குழந்தையை மட்டும் அல்லாமல், மற்ற குழந்தைகளையும் மனத்தளவில் பாதிக்கும். இவற்றை எல்லாம் கடைப்பிடித்தால், ஒவ்வொரு பெற்றோருமே சிறந்த பெற்றோர்’ ஆகத் திகழலாம்.''
திணிக்காதீர்கள்!
டாக்டர் பி.எஸ்.விருதகிரிநாதன், கிளினிகல் நியூரோ சைகாலஜிஸ்ட்.
'குழந்தைகளிடம் இருக்கும் திறமைகள், குறைபாடுகளைப் புரிந்துகொள்ளாமல், பெற்றோர்கள் தங்களின் விருப்பங்களை அவர்கள் மேல் திணிக்கக் கூடாது.  பக்கத்து வீட்டுப் பையன் ஸ்விம்மிங் கத்துக்கிறான்’ என்றோ, உன் ஃப்ரெண்ட் கீபோர்டு க்ளாஸ் போறான் பார்’ என்றோ சொல்லி, அவர்களைக் கட்டாயப்படுத்தி அனுப்புவது கூடவே கூடாது.  
சரியாக எழுத வராத குழந்தைகளுக்கு, கற்றலில் குறைபாடு (Learning Disability), அதீதத் துறுதுறுப்பு மற்றும் கவனக் குறைபாடு (ADHD) போன்ற குறைபாடுகள்கூடக் காரணமாக இருக்கலாம். இவர்களுக்கு அறிவுத்திறன் (ஐ.க்யூ) சாதாரணமாக இருக்கும். பார்வைத்திறன், செவித்திறன் எல்லாம் சரியாக இருந்தும், ஒழுங்காக எழுத வராமல் இருக்கும். இந்தக் குறைபாடுகள் இருப்பின் வழக்கமான பள்ளி நேரம் முடிந்த பிறகு, ரெமெடியல் க்ளாஸ்’களுக்கு அனுப்பிப் பயிற்சி கொடுக்கலாம். சில மாதப் பயிற்சியிலேயே அவர்கள் சாதாரணமாக எல்லோரையும் போல எழுத முடியும். பிள்ளைகளை அடிக்காமல் என்ன பிரச்னை என்று அக்கறையோடு அணுகினால், ஒருவேளை குறைபாடு இருப்பின் சீக்கிரமே கண்டு பிடித்து, சரிசெய்து விடலாம்.'
வரையறைப்படுத்தி, வழிகாட்டுங்கள்!

வி. பாலாஜி, நிர்வாக இயக்குநர், மெட்டாப்ளோர் சொல்யூஷன்ஸ் பி லிட்.
'இன்று நமது வாழ்க்கையில் தொழில்நுட்பத்தைத் தவிர்க்கவே முடியாது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், யூ ட்யூப் போன்றவை, இளைய தலைமுறையின் சிந்தனைகளையும், கருத்துக்களையும், அனுபவங்களையும், படங்களையும் பகிர்வதற்குரிய தளங்களாக இருக்கின்றன. பெற்றோர்கள் அதை முற்றிலுமாகத் தடுக்க முடியாதே தவிர, உபயோகத்தை வரையறைப்படுத்தலாம். பெண் குழந்தைகள் என்றால், அவர்களைப் பற்றிய பர்சனல் டேட்டா’, படங்கள் போன்றவற்றைப் பகிர்வதில் கவனமாக இருக்கச் சொல்லி அறிவுறுத்துவதுடன், அவர்களின் ப்ரைவஸி செட்டிங்’கை உறுதிப் படுத்திக்கொள்ளவேண்டும். சமூக வலைதளங்களை ஒரேயடியாக ஒதுக்க முடியாத இந்நாளில், அதைப் பயன்படுத்துவதற்கான வரம்பை உருவாக்க  கண்டிப்பாகப் பெற்றோர்களின் மேற்பார்வையும் கட்டுப்பாடான வழிகாட்டுதலும் தேவை.  
அதீத நம்பிக்கை ஆபத்தில் முடியும்!
பிள்ளைகளை நம்புங்கள். ஆனால், குழந்தை வளர்ந்து, டீன் ஏஜ் பருவத்தை அடையும்போது மிகவும் அக்கறையோடு கண்காணிக்க வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு... மதுரை எம்.எம்.சியில் நான் ஹாஸ்டல் வார்டனாக இருந்தபோது, அங்கே தங்கிப் படித்துக்கொண்டிருந்த இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர், அந்தக் கல்லூரியில் பணியாற்றிய உதவிப் பேராசிரியரைக் காதலித்தார். அவர் ஏற்கெனவே திருமணமானவர். மாணவியின் பெற்றோருக்கு இது தெரியாது. எனக்கு விபரம் தெரியவந்தபோது, அந்தப் பெண்ணைக் கூப்பிட்டுக் கடுமையாக எச்சரித்ததுடன், அவரின் பெற்றோரை உடனே கிளம்பி வரச்சொன்னேன். ஆனால், அவர்கள் எங்களிடம் எதுவும் கேட்காமல், மகளிடம் கேட்டிருக்கிறார்கள். உஷாரான அந்தப் பெண், அந்த மேடம், ரொம்ப காஸ்ட்லியான கிஃப்ட் ஏதாவது வாங்கித் தரச் சொன்னாங்க. நான் கேட்கலை... அதுதான் உங்களை வரச் சொல்றாங்க போல... நீங்க வராதீங்க'' என்று சொல்லித் தடுத்துவிட்டாள். அவளை நம்பி, பெற்றோரும் வரவில்லை. அடுத்த வாரத்திலேயே, காதலித்த அந்த நபருடன், விடுதியில் இருந்து வெளியேறிவிட்டாள். விடுதியைக் காலி செய்வதற்கு அவள் கொடுத்த கடிதத்தில் பெற்றோரின் கையெழுத்தும் இருந்தது. மேலும் விபரம் கேட்பதற்கு, அவள் பெற்றோரைத் தொடர்புகொண்டாலும், அவர்கள் போனை எடுக்கவே இல்லை. இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து, தன் பெண்ணைக் காணாமல் ஹாஸ்டலுக்கு வந்தனர்.  நான் நடந்ததைக் கூறி, விடுதியைக் காலி செய்வதற்கு அவள் கொடுத்த கடிதத்தையும் காட்டினேன். தங்கள் தவறை நொந்தபடி, மகளைத் தேடிக் கண்டுபிடித்து, பின் எங்களிடம் மன்னிப்புக் கேட்டனர். வயசுப் பிள்ளைகளை ஒரு அளவுக்குத்தான் நம்பவேண்டும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்'' என்றார் டாக்டர் ஜான்சி.
பொறுமையோடு புரியவையுங்கள்!
டாக்டர் தலாத், (ட்ரைகாலஜிஸ்ட்), பெற்றோர் சங்கப் பிரதிநிதி.
''குழந்தை தவறு செய்தால், கண்டிப்பதோடு நிறுத்திவிடாமல், என்ன தவறு’ என்பதைப் புரியவையுங்கள். நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம்... ஒரு குழந்தை, அடிக்கடி பால்கனிக்குப் போய் விளையாடும். அம்மா கண்டிப்பார். பால்கனியில் இருந்து கிழே விழுந்தா என்ன ஆகும்?’ என்று குழந்தை கேட்டபோது, அதன் தாய், இப்போ உள்ளே வர்றியா இல்லையா? பால்கனிகிட்ட எல்லாம் போகக் கூடாது’ என்று மீண்டும் மீண்டும் மிரட்டும் தொனியில் சொல்லியிருக்கிறார். குழந்தைகளுக்கே உரிய என்னதான் ஆகும்’ என்ற ஆர்வத்தில் அது பால்கனியில் இருந்து குதித்துவிட்டது. இதையே, அந்தத் தாய் பொறுமையாக, சில நிமிடங்களைச் செலவழித்து, ஏதேனும் ஒரு பொருளை மேலிருந்து கீழே தூக்கிப் போட்டு, அது உடைவதைக் காண்பித்து விளக்கி இருந்தால், குழந்தை நிச்சயம் புரிந்துகொள்ளும். அதன் பின்னர் அந்தத் தவற்றைச் செய்யாது. சக மனிதரை நேசித்தல், பிறருக்கு உதவுதல், மரியாதை போன்ற எல்லா நல்ல பண்புகளையும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதை விட, நம்மிடமிருந்தே கற்றுக்கொள்ளும் வகையில், நாம் நடந்துகொண்டாலே போதும்.'

Thursday, September 11, 2014

News

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு
DSE - 49 HIGH / HIGHER SECONDARY SCHOOL HMs PROMOTED AS DEO / DEEOs REG ORDER CLICK HERE...

Saturday, September 6, 2014

NEWS

வாசிப்பு திறன் குறைவு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை  "மாணவ,மாணவிகளிடம் வாசிப்பு திறன் குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு,” தொடக்க கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8 வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடத்தில், பாட புத்தகத்தை வாசிக்கும் திறன்குறித்து, கல்வித்துறை இணை இயக்குனர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு செய்தனர். இதில், தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் முழுமையாக வாசிக்க கூட முடியவில்லை என்பதை கண்டறிந்தனர்.சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டுமே தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களிடத்தில், பாட புத்தகங்களின் வாசிப்பு திறன் சிறப்பாக உள்ளது தெரியவந்துள்ளது. மற்றபடி, அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில், மாநில அளவில் முதல் 15 இடங்களை பிடித்த, மாவட்டங்களில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களிடத்தில் கூட வாசிப்பு திறன் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. எச்சரிக்கை: திறன் குறைந்த தொடக்க, நடுநிலை பள்ளிகளில், கற்பிக்கும் ஆசிரியர்கள் மிக கவனத்துடன் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். அடுத்து, பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தப்படும் போது, மாணவர்களிடத்தில் வாசிப்பு திறன் அதிகரித்து இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தொடக்க கல்வித்துறை எச்சரித்துள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது; கல்வித்துறை இணை இயக்குனர் தகுதியில், கண்காணிப்பு அலுவலர் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் தோறும் ஆய்வு செய்ததில், தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களிடத்தில் வாசிப்பு திறன் மிக குறைவாக உள்ளது. தமிழ் பாடத்தை வாசிப்பதில் கூட பின்தங்கி உள்ளனர். 

Monday, September 1, 2014

Double degree

இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம் - இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு

         இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்கு உச்ச நீதி மன்றம் 6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன் மற்றும் விக்ராம் சிங்சென் முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014 அன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு மற்றும் பல்கலைகழக மானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கினை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும்,
இன்றைய மூத்த வழக்குரைஞரான கிரி அவர்கள் பங்கேற்று வாதாடினார். வழக்கை ஏற்றுக்கொண்ட நீதி பதி அவர்கள் 7.5.2014 அன்று உத்தி வைத்தனர். வழக்கானது மீண்டும் 9.05.2014 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் பங்கெடுத்த யு.ஜி.சி. 1010 102103101 என்ற அடிப்படையில் பயின்றால் அந்த படிப்பு தகுதியானது பதில் அளித்தது. இருந்தாலும் விரிவாக பதிலுரை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக யு.ஜி.சி. கேட்டுக்கொண்டது. தமிழக அரசும் கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்த அனைவருக்கும் வழக்கு குறித்த விபரம் அனுப்ப நீதி மன்றம் முனைந்துள்ளது. அதன் பின் வழக்குரைஞர்கள் மூலம் உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும். 
இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.கலியமூர்த்தி அவர்கள் நம்மிடம் கூறியதாவது: இரட்டைப்பட்டம் வழக்கை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது என்பதே எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். ஏனென்றால் வழக்கியல் நியாயம் இல்லாமல் உச்ச நீதி மன்றம் எந்த வழக்கையும் ஏற்றுக்கொள்வதில்லை. இதில் யு.ஜி.சியும் எங்களுக்கு சாதகமாக பதில் அளித்துள்ளது. இதில் யாருடைய பதவி உயர்வையோ அல்லது பணியமர்த்துவதையோ தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால் அதே நேரத்தில் உச்ச நீதி மன்றத்தை நாடிள்ள அனைவருக்கும் 1.1.2012 முன்னுரிமையை பெறுவது என்பது உறுதியாகி விட்டது. எனவே நாங்கள் இந்த முறை உறுதியாக வெற்றியடைவோம். இது குறித்து இரட்டைப்பட்டம் படித்து பதவி உயர்வை தவறவிட்டவர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கூட்டம் சென்னை அல்லது திருச்சியில் தேர்தல் முடிவுக்கு பின்பு நடத்துவதற்கு ஆலோசணை செய்து வருகிறோம் என்றார். மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
3.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)
4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்)
5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362
6.திரு. விஸ்வநாத் - 9842942105

PMmodi news

ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ மாணவர்களுடன் உரையாற்ற ஏற்பாடு

          ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பள்ளி மாணவர்களுடன் உரையாற்ற ஏற்பாடு

             ஆசிரியர் தினத்தின் பெயரை இனிமேல் சமஸ்கிருத மொழியில் குருஉத்சவ்-2014 என்று அழைக்கப்பட வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நாளில் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை கேட்க வேண்டுமென நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும்  தில்லியில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக பிரதமார் நரேந்திர மோடி  வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அந்த உரையாடலை அனைத்து சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் கேட்க வேண்டும். அந்த நாளில் எதற்காகவும் விடுப்பு எடுக்கக்கூடாது. எனவும் அனைத்து சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும் ஒளிப்பரப்பு சாதனங்கள், டி.டி.எச் சாட்டிலைட், மின்சாரம், மின்வெட்டு ஏற்பட்டால் அதை தவிர்க்க ஜெனரேட்டர் என அனைத்தும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யவேண்டும். திரையிடுவதற்கான சாதனங்கள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் கட்டாயம் ரேடியோ மூலம் உரையை கேட்க, பள்ளி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பள்ளியின் இணையதளத்தில் இந்த நிகழ்ச்சி குறித்த தகவலை, தொடர்ந்து வெளியிட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு என்னென்ன வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எத்தனை மாணவர்கள், ஆசிரியர்கள் பங்ககேற்க உள்ளனர். என்ற முழு விவரங்களையும், சி.பி.எஸ்.சி இயக்குனரகத்திற்கு செம்டம்பர் 1-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

news

2014 செப்டம்பர் மாத நாட்காட்டி

 
 *05.09.2014-ஆசிரியர் தினம்.

*06.09.2014-குறை தீர் மனு சிறப்பு முகாம்


* 06.09.2014-ஓணம்-வரையறுக்கப்பட்ட விடுப்பு

* 06.09.2014-தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்டசெயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்என்ற தலைப்பில் குறுவளமைய
அளவில் ஒரு நாள் பயிற்சி.

*10.09.2014 முதல் 12.09.2014 வரைஉயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு"கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சிஎன்ற தலைப்பில் வட்டார வளமையஅளவில் மூன்று நாள் பயிற்சி.


* 17. 09. 2014 முதல் 25.09.2014 வரை உயர் மேல்நிலைப்பள்ளி 6 முதல் 9 வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடைபெற உள்ளது.

*22.09.2014-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பருவ தேர்வுஆரம்பம்.


* 27.09.2014-05.10.2014-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பருவதேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கான விடுமுறை.