Friday, November 28, 2014

Pallikudam

மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு!
              தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள், அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும் 30க்குள் கல்வித்துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

              மாநில கல்வித் திட்ட, தமிழ்வழி பாடத்திட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகிறது. மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில், தமிழ் அல்லாத மற்ற விருப்பமொழி பாடத்திட்டத்தில், 565 தனியார் சி.பி.எஸ்.ஐ., ஐ.சி.எஸ்.இ. பள்ளி, மத்திய அரசின் 41 கேந்திர வித்யாலயா, இரண்டு நவோதயா, ஒரு சைனிக் பள்ளிகள் செயல்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி பள்ளிக்கல்வி இயக்குனரகம், தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய வாரிய பள்ளிகளை கொண்டு வர, ஓர் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதில், தமிழக அரசின் தமிழ் கற்றல் சட்டத்தின்படி, தனியார் நர்சரி, பிரைமரி, மேல்நிலைப்பள்ளி, தமிழை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும். குறிப்பாக, கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் பள்ளிகள் தவிர, மற்ற பள்ளிகள் அனைத்தும், வரும், கல்வியாண்டு வாரியாக, அதாவது, 2015--16ல், 1ம் வகுப்பு, 2016--17ல், 1, 2ம் வகுப்பு, 2017--18ல், 1, 2, 3ம் வகுப்பு, 2018--19ல், 1, 2, 3, 4ம் வகுப்பு, 2019--20ல், 1 முதல், 5ம் வகுப்பு என்ற வரிசையில், வரும், 2024--25ம் ஆண்டுக்குள், 1 முதல், எஸ்.எஸ்.எல்.சி., வகுப்பு வரை, அமல்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டது. இதன்மூலம் மத்திய கல்விய வாரிய பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு வகுப்பு எடுத்த தனியார் சி.பி.எஸ்.ஐ.,- ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், மாநில அரசின் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. கடந்த காலங்களில், மாநில பாடத்திட்டத்தில் செயல்படும், தனியார் பள்ளிகளிடம் இருந்து, பள்ளிகளின் தரம் தொடர்பாக தொடர் அங்கீகார சான்று, ஒவ்வொரு ஆண்டும் பெறப்படும். அதன்படி, நடப்பாண்டு, வருவாய் துறையினரிடம் இருந்து கட்டிட உரிமைச் சான்று, அங்கீகரிக்கப்பட்ட கட்டட இன்ஜினியரிடம் இருந்து, கட்டிட உறுதிச் சான்று, சுகாதரத்துறையிடம் இருந்து, சுகாதாரச் சான்று, தீயணைப்பு துறையிடம் இருந்து, தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு என, நான்குவகை சான்று பெற்று, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியிடம், தனியார் பள்ளிகள் சமர்ப்பித்து வருகின்றன. கடந்த காலங்களில், சி.பி.எஸ்.ஐ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், மத்திய கல்வி வாரியத்தில், சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்பித்து வந்தனர். ஆனால், தற்போதைய புதிய உத்தரவால், நீதிபதி சம்பத் கமிஷன் பரிந்துரை செய்த, 14 விதிமுறைகளை, மத்திய கல்வி வாரிய பாடத்திட்ட தனியார் பள்ளிகள், கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த விவரங்களை, வரும் 30ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என, கல்வித்துறை கட்டாய உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநில அரசின் கல்வித்திட்டத்தில் செயல்பட்டு வந்த, தனியார் பள்ளிகளிடம் இருந்து மட்டுமே, கடந்த காலங்களில் தொடர் அங்கீகார சான்று பெறப்பட்டது. ஆனால், வரும் கல்வியாண்டில், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் செயல்படும் தனியார் சி.பி.எஸ்.ஐ.,- ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், தமிழை கட்டாய பாடமாக, துவக்கப் பள்ளியில் இருந்து துவங்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட தனியார் பள்ளிகளை, மாநில அரசின் கல்வித்துறை கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, பள்ளிகளுக்குள் நடக்கும் விதிமீறல், மாணவர் தொடர்பான பிரச்னை ஆகியவற்றை, மாநில அரசு கையாள வேண்டியுள்ளதால், அவர்களின் அங்கீகார விவரங்களை பரிசோதிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Pallikudam

பள்ளியிலேயே சகமாணவனால் மாணவன் குத்திக்கொலை:
அருப்புக்கோட்டையில் பயங்கரம்!
          விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 8ஆம் வகுப்பு மாணவன் சகமாணவனால் பள்ளிக்கூடத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

         அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அயன்கரிசல்குளத்தை சேர்ந்த விவசாயி கோபால் என்பவரது மகன் பாஸ்கரன் (13) 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு அரசு டவுன் பஸ்சில் பந்தல்குடிக்கு வந்த பாஸ்கரன், பள்ளிக்கு சென்று தனது வகுப்பறையில் உட்கார்ந்திருந்தார்.

அப்போது அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவன் பாஸ்கரனிடம் வந்து தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்த மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாஸ்கரனின் வயிறு உள்பட பல இடங்களில் கத்தியால் குத்தி விட்டு பள்ளியை விட்டு ஓடி விட்டார். பலத்த காயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த பந்தல்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த மாணவன் பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்திய அந்த மாணவனுக்கும், பாஸ்கரனுக்கும் இடையே இருந்த முன் விரோதத்தால் அந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்தியால் குத்திய அந்த மாணவன் யார் என்ற விபரத்தை கண்டுப்பிடிக்கும் விசாரணையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். பள்ளி வளாகத்தில் கொலை நடந்திருப்பதால் உடனடியாக பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்தில், பள்ளியிலேயே மாணவர் ஒருவர் சகமாணவனால் படுகொலை செய்யப்பட்டார். தற்போது அருப்புகோட்டையிலும் பள்ளியில் மாணவர் ஒருவர் சகமாணவரால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, November 26, 2014

pallikudam

சங்க நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு

              தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் தலைமையில் சங்க நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு

✅தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் ,மாநில செயலாளர் திரு.ஏ.இரமேஷ் ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர்களை நேற்று சந்தித்தனர்.
✅முக்கிய கோரிக்கைகள் மற்றும் விவாவதங்கள்.
✅CPS ஐ GPF - ஆக மாற்றும் கருத்துருக்களை அரசுக்கு அனுப்ப போவதாக இயக்குனர் உறுதிமொழி.
✅01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில் உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.
✅அலகு விட்டு அலகு மாறுதல் ஆண்டுதோறும் நடைப்பெற வேண்டுமெனக் கோரிக்கை.
 
✅அலகு விட்டு அலகு மாறுதலில் நேரடி நியமன பட்டதாரிகளுக்கு மட்டும் வாய்ப்பளிக்க கோரிக்கை
✅நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு விகிதசாரம் பெற குழு அமைக்க கோரிக்கை
✅MPhil-க்கான பின்அனுமதி மற்றும் பின்னேற்பு வழங்க கோரிக்கை
✅பணிவரன் முறை மற்றும் தகுதிகாண் பருவம் உரிய விளக்கம் மாவட்ட அலுவலர்களுக்கு வழங்க கோரிக்கை
✅ ஓய்வு பெற்ற அல்லது இறந்த ஆசிரியர்களுடைய CPS - கணக்கிலுள்ள நிலுவைத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
✅தொடக்கக்கல்வி துறையில் பணிபுரிந்து அலகு விட்டு அலகு மாறுதல் மூலமோ அல்லது பள்ளிக்கல்வி துறைக்கு ஈர்க்க பட்டோரின் CPS கணக்கை சரிசெய்ய கோரிக்கை
✅அலுவலக பணிக்காக ஆசிரியர்களை மாற்று பணியில் அமர்த்த கூடாது எனக் கோரிக்கை

Tuesday, November 25, 2014

pallikudam

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

              முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை  வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் புதன்கிழமை (நவ.26) கடைசி நாளாகும்.

               இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

               1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 1.80 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன. சென்னையில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விநியோகிக்கப்படுகின்றன.

Pallikudam

CPS - குறித்து அரசாணை மற்றும் தெளிவுரைகள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
             பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் தொகை திரும்ப வழங்குவது குறித்து அரசாணை மற்றும் தெளிவுரைகள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

TAMIL NADU CHIEF MINISTER'S SPECIAL CELL PETITION NO.2014/804447/AJ - DSE REPLIED TO PETITIONERS, THERE IS NO GOVT ORDER & CLARIFICATION REG ISSUANCE OF CPS FINAL SETTLEMENT & PENSION FOR THOSE R RETIRED UNDER CPS SCHEME

Pallikudam

ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு 10 ஆயிரம் விண்ணப்பம் விற்பனை!!!
          முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு எழுத, மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றனர். கடந்த 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி எழுத்து தேர்வு வரும் 10.1.2015 அன்று, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடக்கிறது.

           சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வரப் பெற்றுள்ளது. விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகத்தில் கடந்த 10ம் தேதி முதல் விண்ணப்பங்கள் (ஒரு விண்ணப்பம் ரூ.50 விலை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 11 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் வரவழைத்து, நேற்று வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை, வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 26ம் தேதி மாலை 5:00 மணிவரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சரி பார்த்து பெறும் இடத்தில், அதிகமானோர் காத்திருக்கும் நிலை உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெளியூர்களில் இருந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வருவோர் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையிலும், சி.இ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பம் பெறுவதற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

Pallikudam

பாரதியார் பல்கலை: இளங்கலை கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
          கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில்  2015-2017ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் பல்வேறு துறைகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி:

இளங்கலை அல்லது முதுகலையில் (தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய படிப்பில் ஏதுதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

கையேடு மற்றும் விண்ணப்பங்களை தபால் மூலம் பெற ரூ.500 வரைவோலை அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு மார்ச் 29ல் நடைபெறுகிறது.

விண்ணப்பம் கிடைக்கும் மையங்கள்:

கோவை, சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மையங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Pallikudam

இன்று முதல் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா
        கற்றலில் குறைபாடுடையோர் ஆதரவு சங்கம் சார்பில் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா நவம்பர் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியது:

கற்றலில் குறைபாடுடையோரின் திறமைகளை வெளிக்கொண்டுவரவும், கற்றலில் குறைபாடு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா நடைபெறுகிறது.

இந்தநிகழ்ச்சியின் தொடக்கமாக நவம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தியாகராய நகர் வாணி மகாலில் கற்றலில் குறைபாடு குறித்த குழு விவாதம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் 25-ஆம் முதல் 29-ஆம் தேதி வரை தியாகராய நகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நெருப்பை பயன்படுத்தாமல் சமையல் செய்தல், கதை சொல்லுதல், நடனம், இசை ஆகிய போட்டிகள் நடைபெறும்.

Sunday, November 23, 2014

Pallikudam RL

RL LIST 2015
JAN >1, 24,
FEB >3,14, 19,
MAR>5,21,

APR>5,14,15,
MAY>3 ,9
JUL>17
AUG>18,29
SEP>17
OCT>20,22 ,27,30
NOV>10,12,13,17
DEC >24

Pallikudam

மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு..
            குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

            அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் வாசிப்பு திறன் தொடர்பாக, மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்துமாறு, கல்வித்துறை அலுவலர்களுக்கு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டது. துவக்கப் பள்ளிகள், நடு நிலைப் பள்ளி மாணவர்களில் சிலர், படிப்பில் பின்தங்கியவர்களாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் திட்டமாக, இந்த ஆய்வு நடத்தப்பட்டது. எளிமையான கேள்விகள் கொண்ட வினாத்தாள் உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, மாணவர்களுக்கு முன்சோதனை தேர்வு நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 1,164 அரசு பள்ளிகள் மற்றும் 62 அரசு உதவிபெறும் பள்ளிகள் என 1,226 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 14 ஒன்றியங்களில் குறிப்பிட்ட பள்ளிகளை மட்டும் தேர்வுசெய்து நடத்தப்பட்ட இத்தேர்வில், 60 முதல் 70 சதவீதம் வரை, வாசிப்பு திறன் குறைந்த மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், போதிய பயிற்சி அளிக்க, திருப்பூர், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில், ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கிராமப்புறங்களை காட்டிலும், நகரப்புற மாணவர்களிடம் வாசிப்பு திறன் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. பல குழந்தைகளின் பெற்றோர், வெளி மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்களாக இருப்பதால், அடிக்கடி வசிப்பிட மாற்றம் அவர்களின் கல்வியை பாதிக்கிறது. படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களுடன் நட்பு கொள்ளும்போது, படிப்பை விட்டு கவனம் சிதறுகிறது. நெருக்கடியும், போக்குவரத்தும் அதிகமாக உள்ள அமைதியற்ற வாழ்விட சூழலால், வீடுகளில் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கைவிடுகின்றனர். சினிமா நடிகர்கள் மீதான ஆர்வம், டிவி பார்க்கும் பழக்கம், கிரிக்கெட் போன்றவற்றில் இருக்கும் அபரிமிதமான ஆர்வம், படிப்பில் மாணவர்களின் கவனத்தை குறைத்து விடுகிறது. எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால், மாணவர்களை கட்டாயப்படுத்தி படிக்கச் சொல்லும் மனநிலை, சில ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை என, ஆய்வில் தெரியவந்துள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜாமணி கூறுகையில், "வாசிப்பு திறன் குறைந்த மாணவர்களுக்கு, பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தி, கற்றல் திறனை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுமையான ஈடுபாட்டுடனும், மாணவர்களின் கல்வி நலனில் அக்கறையோடும் செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

Pallikudam

INCOME TAX - மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும்?
           INCOME TAX - மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார்.
         மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார். டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: மாதச்சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள்நேரடியாக அதிக வருமான வரி செலுத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து வருமான வரி வசூலிப்பதை குறைத்தால், சம்பளப் பணம் அவர் களுக்கு முழுமையாகச் செல்லும். அவர்கள் அதிகம் செலவும் செய்வார்கள். இதன் மூலம் மறைமுகமாக வரியை பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம், வரி ஏய்ப்பு செய்பவர்களை தப்பவிடக்கூடாது.

        அரசுக்கு கிடைக்கும் வரி வருமானத்தில் பாதி அளவுக்கு மறைமுக வரிதான். அதாவது உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சேவை வரி என பல வரிகள் செலுத்தி வருகிறார்கள். என் உதவியாளர் எந்த அளவுக்கு மறைமுக வரி செலுத்துகிறாரோ, அதே அளவுக்கு நானும் மறைமுக வரி செலுத்துகிறேன். செலுத்தும் அளவுகளில் மாற்றம் இருக்குமே தவிர, நாம் அனைவரும் மறைமுக வரி செலுத்துகிறோம்.

          கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொகை 2 லட்ச ரூபாயிலிருந்து 2.5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்போதைக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வரி செலுத்த தேவை இல்லை. மற்ற இதர விலக்குகளை சேர்த்துக்கொண்டால் 3.5 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை வரி இல்லாமல் சமாளிக்கலாம். 35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நபர், சரியான சேமிப்பை செய்தால் அவர் வரி கட்டத் தேவை இல்லை. ஆனால், வாடகை, குழந்தைகளின் செலவு ஆகிய காரணங்களால் இந்த எல்லைக்குள் இருப்பவர்கள் பலரால் சேமிக்க முடியவில்லை. மேலும் வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க, தற்போது இருக்கும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பை குறைக்கும் திட்டம் இல்லை. அது சரியான வழியும் அல்ல. இந்த நிலையில், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த விலக்கினை இன்னும் அதிகரிக்கலாம். நானும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால் தற்போதைய அரசின் வருமான சூழ்நிலையில் இது சவாலான விஷயம். கடந்த முறை என்னுடைய எல்லைகளை தாண்டியும் பல சலுகைகளை வழங்கினேன். நேரடியாக வருமான வரியாக வசூல் செய்வதை விட, அவர்கள் செலவழிக்கும் பட்சத்தில் பொருளாதார பரிவர்த்தனைகள் அதிகரித்து, மறைமுக வரி வருவாய் உயரும்.

         கிசான் விகாஸ் பத்திரம் கிசான் விகாஸ் பத்திரங்களை மீண்டும் அறிமுகம் செய்திருப்பது கருப்புப் பணத்தை ஊக்குவிப்பதுபோல் அமைந்துள்ளது என்று சில கட்சிகள் அச்சம் தெரிவித்திருப்பது தேவையற்றது. அந்தப் பத்திரத்தை வாங்கும் முதலீட்டாளர்கள் தங்களின் பெயர், விலாசம், பான் அட்டை எண்ணை கண்டிப்பாக அளிக்க வேண்டும். எனவே இந்தப் பத்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியாது. தீவிரவாத அமைப்புகள் கிசான் விகாஸ் பத்திரங்களை வாங்கக்கூடும் என்று எழுப்பப்படும் அச்சங்களும் தேவையற்றது. அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

Pallikudam

அரசு ஊழியர், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு உத்தரவு
               வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்கள் - அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கென சில கட்டுப்பாடுகளை
தமிழக அரசு வகுத்துள்ளது.

   அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெறுவதற்கு அரசிடம் இருந்து தடையின்மைச் சான்று, அடையாளச் சான்றினைப் பெறுவது அவசியமாகும். அவ்வாறு பெற்ற பிறகே அவர்கள் புதிதாக பாஸ்போர்ட் பெறவும், காலாவதியான பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

இந்தச் சான்றிதழ்களில் விண்ணப்பதாரரின் புகைப்படம் ஒட்டப்பட்டு சான்று அளிக்கும் அதிகாரி கையெழுத்திட வேண்டும். அதற்கு முன்பாக, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை உறுதி செய்திட வேண்டும். அந்தக் கட்டுபாடுகளின் விவரம்:

வெளிநாடுகளில் கல்வி பயிலவோ, பயிற்சிகளை மேற்கொள்ளவோ செல்ல விரும்பும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உரிய அனுமதியை அரசிடம் இருந்து பெற வேண்டும். வெளிநாட்டுப் பயணத்தின் போது அதற்காகும் செலவினங்களை அரசுத் துறையோ அல்லது அரசோ ஏற்றுக் கொள்ளாது. பயணத்துக்காக அரசு ஊழியரோ அல்லது அதிகாரியோ ராஜிநாமா கடிதங்களை அளித்திட முடியாது. அவ்வாறு செய்வது ஏற்றுக் கொள்ளப்படாது. வெளிநாட்டுப் பயணத்தின் போது எந்தவித வர்த்தகத்தையோ, வணிகத் தொடர்புகளையோ மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்வது ஏற்றுக் கொள்ளப்படாது.

          வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, பயண விடுப்புக்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அரசுத் துறையின் தலைவரிடம் அளிக்க வேண்டும். விடுப்புக்குத் தகுதி என்ற பட்சத்தில் உயர் அதிகாரியின் அனுமதி கிடைத்த பிறகே பயணத்தைத் தொடங்க வேண்டும்.

  பாஸ்போர்ட்டுக்காக அரசால் வழங்கப்படும் அடையாளச் சான்றின் காலம் ஆறு மாதங்கள் மட்டுமே ஆகும். அதன்பிறகு அது காலாவதியாகி விடும். தமிழக அரசு வகுத்துள்ள இந்தக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் அரசு அலுவலர், அதிகாரிகளுக்கே பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்குத் தேவையான அடையாளச் சான்றும், தடையின்மைச் சான்றும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.