Friday, June 30, 2017

Raj-Pallikudam

நவகிரகம்
ஞாயிறு
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் கலைவாய்!

Thursday, June 22, 2017

Pallikudam

இனி வரும் காலங்களில் SSA மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் எப்படி இருக்கும் ?? யார் கண்காணிப்பில் இருக்கும் ??
இனி வரும் காலங்களில்
SSA Upper Primary Block level பயிற்சிகள் RMSA உடன் இணைந்தே நடைபெறும் .

6,7,8,9,10 ஆகிய வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு ஒரே வளாகத்தில் பயிற்சி.

Upper Primary SSA block level training
இனிமேல் RMSA உடன் இணைந்தே நடத்தப் படும் .
RMSA ஆசிரியர்கள் , BRTEs இதில்
சேர்ந்தே  கருத்தாளராக பங்கேற்க வேண்டும்.

ஒரே வளாகத்தில் நடத்தப்படும் இப்பயிற்சியில் 9,10 எடுக்கும் ஆசிரியர்களுக்கு தனி அறையிலும் ,
6,7,8 எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்
( both middle , HIgh , and. Hr .sec school )
தனி அறையிலும் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும்
( ஆனால் வளாகம் ஒரே வளாகம் தான் )

11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கு
தயாராகும் விதத்தில் RMSA
Rashtriya Avishkar Abhiyaan ( RAA ) என்ற பெயரில் விரிவடைகிறது .

நோக்கம் நல்ல நோக்கம்
NEET போன்ற போட்டித் தேர்வுக்கு
மாணவர்களை தயார் செய்தல்

பயிற்சியில் பாடம் தவிர பிற அரட்டைகள் , நகைச்சுவைக்காக வெளி விஷயம் கூறல் போன்றவை இருக்கக் கூடாது.

பாடம் சார்ந்த பயனுள்ள தகவல் மட்டுமே பகிரப்பட வேண்டும்.

சரியாக பாடம் எடுக்காத கருத்தாளர் பற்றிய புகாரை What's app logo வை scan செய்து Education secretary க்கு பயிற்சி மையத்தில் இருந்தே பங்கேற்பாளர்கள் புகார் அளிக்கலாம்.

Skype மூலம் ONLINE VIDEO CONFERANCE இல் பள்ளிக் கல்வி செயலர் , ஒவ்வொரு மையத்தையும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்வார் .நோக்கம் , தரமான பயிற்சி .

FEED BACK படிவங்களை பயிற்சி மையங்களில் இருந்தே , ONLINE மூலமாகஆசிரியர்கள் வழங்க , கூடிய விரைவில்,  வசதிகள் செய்யப்படும்.

புதிதாக வரவிருக்கும் பாடத்திட்டத்திற்கு
புத்தகம் எழுதும் பணிக்கும் , ஆசிரியர்களுடன்
BRTE s உம் , சேர்ந்தே கலந்து கொள்ள வேண்ணடும்
*RMSA (SSA combined ) பயிற்சிகள்*
நடைபெறும் மையங்களில் கருத்தாளர்கள் ( RPs ) முறையாகப் பாடம் மற்றும் பயிற்சி எடுக்கிறாரா ???
பயிற்சி முறையாக ,நன்றாகச் சென்று கொண்டிருக்கிறதா ???
என்பதை நொடிக்கு நொடி கண்காணித்து Education Secretary க்கு அனுப்ப MICRO OBSERVER* ஒருவர் நியமிக்கப் பட்டுஅந்தப் பயிற்சி மையத்தின் பயிற்சியின் current  status -  Education secretary க்கு Video conference ( video call )  மூலம் Micro observer ஆல் தெரிவிக்கப்படும் . இதன் பிரதான நோக்கம் ஒன்றே ஒன்றுதான் பயிற்சி தரமான பயிற்சியாக சென்றடைய வேண்டும்.

Thursday, June 15, 2017

Pallikudam

SOCIETY LOAN LIMIT - 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை

"கூட்டுறவு நாணய சங்கத்தில் பெரும் கடன் தொகையை 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது"

Wednesday, June 14, 2017

Pallikudam

20 ஆண்டிற்குப் பின் விடியலை நோக்கி காத்திருக்கும் 5000 ஆசிரியர்கள்....

1997 ல் பின்னடைவு காலிப் பணியிடத்தில் பணியேற்ற SC/ST ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அவர்களின் மீதான நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்து பணியேற்ற நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக ஏற்று ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கக் கோரி காத்திருக்கும் 5000ஆசிரியர்களுக்கு தற்போது கல்வித்துறையில் புரட்சி செய்து வரும் பள்ளிக்கல்வி முதன்மை செயலர் அவர்களை 5/06/2017 அன்று சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். கனிவுடன் கோரிக்கையை கேட்ட செயலர் அவர்கள் இது குறித்து நல்லதொரு அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக உறுதி அளித்துள்ளார். இக்கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வில் பிற ஆசிரியர்களுடன் உள்ள ஏற்றத்தாழ்வினை அகற்றி சமத்துவம் நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்...இவண் *ஆசிரியர்களில் கடைக் கோடியில் தனித்து விடப்பட்ட 1997 முதல் 2002 வரை பணியேற்ற ஆசிரியன்*..

Raj Pallikudam

20 ஆண்டிற்குப் பின் விடியலை நோக்கி காத்திருக்கும் 5000 ஆசிரியர்கள்....

1997 ல் பின்னடைவு காலிப் பணியிடத்தில் பணியேற்ற SC/ST ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அவர்களின் மீதான நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்து பணியேற்ற நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக ஏற்று ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கக் கோரி காத்திருக்கும் 5000ஆசிரியர்களுக்கு தற்போது கல்வித்துறையில் புரட்சி செய்து வரும் பள்ளிக்கல்வி முதன்மை செயலர் அவர்களை 5/06/2017 அன்று சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். கனிவுடன் கோரிக்கையை கேட்ட செயலர் அவர்கள் இது குறித்து நல்லதொரு அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக உறுதி அளித்துள்ளார். இக்கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வில் பிற ஆசிரியர்களுடன் உள்ள ஏற்றத்தாழ்வினை அகற்றி சமத்துவம் நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்...இவண் *ஆசிரியர்களில் கடைக் கோடியில் தனித்து விடப்பட்ட 1997 முதல் 2002 வரை பணியேற்ற ஆசிரியன்*..

Thursday, June 8, 2017

Raj-Pallikudam

அரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா?- பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்குமாறு உத்தரவு வரவிருக்கிறதா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்தார்.

சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகளை வழங்கினார். விழாவில் அவர் கூறியதாவது:

தமிழக அரசு வெளிப்படைத்தன் மையுடன் செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் வெளிப்படையாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப் பட்டன என்பதை அனைவரும் நன்கு அறிவர். ஆசிரியர்கள் எந்தவிதமான மன உளைச்சலும் இல்லாமல் நல்ல முறையில் பணியாற்ற இந்த அரசு என்றும் துணை நிற்கும். தற்போது கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கை யையும் மக்கள் கூர்ந்து கவனிக் கிறார்கள். கல்வித்துறையை மேம் படுத்துவதன் மூலம் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும்.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 20 லட்சம் பேருக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு களை அனுப்பினோம். இது இந்தியா வில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சரித்திர சாதனை ஆகும். பாகுபாடு காரணமாக மாணவர் களுக்கு ஏற்படும் மன உளைச் சலைத் தடுக்கும் வகையில் பொதுத் தேர்வுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறையை இந்த ஆண் டிலிருந்து ரத்து செய்துள்ளோம். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு களுக்கான தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியிட்டிருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட் டையன் கூறினார்.

விழாவில் தென்சென்னை எம்பி டாக்டர் ஜெ.ஜெயவர்தன், தி.நகர் எம்எல்ஏ சத்யா, விருகம்பாக்கம் எம்எல்ஏ விருகை ரவி, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாண வர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு கள், சீருடை, காலணி, லேப்-டாப், சைக்கிள் என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படு கின்றன. தற்போது முதல்கட்டமாக பாடப்புத்தகம், நோட்டு, சீருடை ஆகிய மூன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. எஞ்சியவை விரைவில் வழங்கப்படும். பள்ளி திறந்த முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 3 லட்சம் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, சீருடை வழங்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு வைக்கப்போகிறார்களே, வினாத்தாள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மாணவர்களுக்கு இருக்கிறது. அவர்களின் அச்சத் தைப் போக்கும் வகையில் ஒரு வாரத்தில் அவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். அப் போதுதான் அதற்கேற்ப ஆசிரியர் கள் பயிற்சி அளிக்க முடியும். அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாண வர்களைத் தயார்படுத்த அவர்க ளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முடிவுசெய்துள்ளோம். இதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட இடத்தை தேர்வுசெய்து அங்கு சனிக்கிழமை தோறும் 3 மணி நேரம் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

அரசு ஊழியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறித்து கேட்கிறீர்கள். கல்வி என்பது ஒருவரின் மனநிலையைப் பொறுத்தது. ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெறுவோர் பெரும்பாலும் அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகளில் படித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் கூட தயாராக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். ஜூன் 15-ம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது 40-க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம்

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், புதிய பஸ் பாஸ் வழங்கப்படும்வரை, மாணவர்கள் தாங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி அரசு பஸ்களில் பயணம் செய்யலாம். இது தொடர்பாக அனைத்து போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, June 7, 2017

Raj-Pallikudam

அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் இந்தாண்டு 'ஸ்மார்ட்' வகுப்பு
அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு முதல் 'ஸ்மார்ட்' வகுப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சில அரசு பள்ளிகளில் ஏற்கனவே 'ஸ்மார்ட்' வகுப்பு செயல்பாட்டில் உள்ளது.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான செயல்வழி கல்வி 'இன்டர்நெட்' இணைப்புடன் கூடிய 'புரஜெக்டர்' மூலம் திரையில் ஒளிபரப்பப்பட்டு கற்பிக்கப்படும்.அதேபோல் ஐந்தாம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான படைப்பாற்றல் கல்வி திரை மற்றும் 'கம்ப்யூட்டர்' மூலம் நடத்தப்படும். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்பிரிவுகளும் திரை மூலம் கற்பிக்கப்படும்.

சிறந்த ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களும் பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்பப்படும். இந்த முறையை இந்தாண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பயிற்சி விரைவில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஸ்மார்ட்' வகுப்புக்கான அறை 20 க்கு 20 அடியில் தனியாக ஏற்படுத்தப்படும்.

இந்த முறையால் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தாலும், பாடம் கற்பிப்பது பாதிக்காது. காலிப் பணியிடங்கள் ஏற்படும்போது, பிற பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் 'லைவ்' மூலம் மாணவர்களுக்கு ஒளிபரப்பப்படும். இதனால் ஆசிரியர்கள் இல்லை என்ற குறை ஏற்படாது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது, என்றார்.

Pallikudam

கலை, அறிவியல் படிப்புகளுக்குவிண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு.
கடந்த ஆண்டுகளைப் போலவே கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிபோரின் எண்ணிக்கை, 2017-18 கல்வியாண்டிலும் அதிகரித்துள்ளது.

வழக்கம்போல வணிகவியல் படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாகவும், அதற்கு அடுத்தப்படியாக அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் பல்வேறு கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 12-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஒரு சில கல்லூரிகள் அதற்கு முன்னதாகவே விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கின.

அதிக மதிப்பெண் பெறும் சிறந்த மாணவர்களையும் கவரும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், அரசு கல்லூரிகளிலும் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகமும், மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான அரசு கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகமும், பூர்ததி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் கால அவகாசமும் வியாழக்கிழமையுடன் (மே 25) முடிவடைந்தது. சில அரசு கல்லூரிகள் மே 27-ஆம் தேதி வரையிலும் அவகாசம் அளித்துள்ளன.
இந்த நிலையில், வியாழக்கிழமை (மே 26) வரையிலான நிலவரப்படி, கலை அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டுகளைப் போலவே அதிகமாக விநியோகமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

மொத்தம் 1,100 இடங்களைக் கொண்ட சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் 11,000 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இவர்களில் வியாழக்கிழமை வரை 8,700 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதில் பி.காம். படிப்புக்கு மட்டும் 3000 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள அக்கல்லூரி முதல்வர் ராதா கூறினார்.
அதுபோல சென்னை மாநிலக் கல்லூரியில் 10,000 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இது கடந்த ஆண்டுகளை விட அதிகம் எனவும், குறிப்பாக பி.காம்., பி.எஸ்சி. கணிதம் மற்றும் அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அக் கல்லூரி முதல்வர் பிரேமானந்த பெருமாள் கூறினார்.

இதுபோல சென்னை ராணி மேரிக் கல்லூரி, மயிலாடுதுரை மணல்மேடு அரசுக் கல்லூரி, ஒசூர், சிவகாசி என அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக கல்லூரி நிரிவாகிகள் தெரிவிக்கின்றனர். கலை, அறிவியல் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என கல்லூரி முதல்வர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசாணை இருந்தும் பயனில்லை: இதுகுறித்து சென்னை ராணி மேரிக் கல்லூரி மூத்த நிர்வாக ஒருவர் கூறியது:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருவதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதியன்று அரசாணை (அரசாணை எண். 86) ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

அதில், அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகமுள்ள நிலையில் அடிப்படை அறிவியல் பாடப் பிரிவுகளில் மாணவர்கள் எண்ணிக்கையை 60 இடங்கள் என்ற அளவிலும், கலை சார்ந்த பாடப் பிரிவுகளில் 100 இடங்கள் என்ற அளவிலும் உயர்த்திக் கொள்ளலாம் என அதில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆணைப்படி இடங்களை உயர்த்திக்கொள்ள கல்லூரி கல்வி இயக்குநரிடம் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட இணைப்புப் பல்கலைக்கழகத்திடமும் கல்லூரிகள் அனுமதி பெறவேண்டியச் சூழல் உள்ளது.

இதில், இயக்குநர் உடனே அனுமதியளித்தாலும், பல்கலைக்கழக அனுமதிக்காக பல நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சில பல்கலைக்கழகங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கின்றனர். இதனால், அரசுக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் ஏழை மாணவர்கள், வேறு வழியின்றி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளை நாடிச் செல்ல வேண்டியச் சூழல் ஏற்படுகிறது. எனவே, இதற்கு உரிய தீர்வை அரசு காண வேண்டும் என்றார்.

இதே கருத்தை மயிலாடுதுரை மணல்மேடு அரசுக் கல்லூரி முதல்வர் சிவராமன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா கூறியது: இந்த அரசாணைப்படி இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள இயக்குநர் அலுவலகத்திலும், சம்மந்தப்பட்ட இணைப்புப் பல்கலைக்கழகத்திடமும் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயம். அதை மாற்ற இயலாது.
கல்லூரிகள்தான் இதற்கான விண்ணப்பத்தை விரைவாக சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

pallikudam

சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது

கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். அதை தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, பிப்ரவரி 1–ந்தேதிகளில் நடைபெற்றது.

Pallikudam

தமிழக அரசு பாடத்திட்டத்தில் யோகா மற்றும் சாலை விதிகள் விரைவில் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 41 அதிரடி அறிவிப்புகள் பற்றி வரும் 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது 41 அறிவிப்புகள்
          கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு புத்தகங்கள் ,சீருடை ஆகியவற்றை வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு பாடபுத்தகம், சீருடை வழங்கிய பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். தனியாருக்கு இணையாக தமிழக பள்ளிக்கல்வித் துறை திகழ்ந்துக் கொண்டிருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கோடை விடுமுறை முடிந்து விட்டது. மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்துள்ளனர். வானமே பூ மழை தூவி வருங்கால கல்வியாளர்களை வாழ்த்தி வரவேற்கிறது. சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை திறந்த தரத்துடன் திகழ்கிறது. மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் எதிர்க்கொள்ளும் வகையில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.
பள்ளிக்கல்வித்துறையில் நேற்று அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறியிருந்தார் செங்கோட்டையன். அது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார்.
நீட் தேர்வு பற்றி நாங்கள் கூறவில்லை. நீட் வேறு பொது தேர்வு வேறு. மத்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை பற்றிய அறிவிப்பை சாதாரணமாக வெளியிடுவதை விட மானியக்கோரிக்கையில் வெளியிட்டால் அது சட்டசபை வரலாற்றில் இடம் பெறும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் செங்கோட்டையன் என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

Pallikudam


முதுநிலை ஆசிரியருக்கான நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

முதுநிலை ஆசிரியருக்கான நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
*மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்.

Ra-Pallikudam

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு.அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்எண் மற்றும் மாணவர் வருகை நாட்களைபள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுஅரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்துவேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்குஇதுபோன்ற விபரங்கள் அடங்கியமாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.